sasikumar நடிப்பில் அயோத்தி படம் எப்படி இருக்கு?
Ayothi Movie Review in Tamil -அன்புதான் எல்லாம். இங்க மதத்த விட மனிதாபிமானம் தான் முக்கியம் என்பதை ஆணி அடித்த மாதிரி தெளிவாக கூறியிருக்கிறார் இயக்குநர். படத்தை நிச்சயமாக திரையரங்கில் சென்று பார்க்கலாம்.
அயோத்தியில் வசித்து வரும் பல்ராம் மிகத் தீவிரமான இந்து குடும்பத்தைச் சார்ந்தவர். தான் தான் எல்லாம் எனும் மனப்பான்மை கொண்டவனுக்கு மனைவி, மகள், மகனுடன் ராமேஸ்வரம் புனித பயணம் செல்லவேண்டும் என ஆசை. அப்படி ஒருமுறை ராமேஸ்வரம் வந்திருக்கும்போது எதிர்பாராத விதமாக பல்ராம் குடும்பத்தில் ஒரு இறப்பு நேர்கிறது.
இதனால் பல்ராம் குடும்பம் தவிக்கிறது. இங்கு மொழி தெரியாத ஊரில் யார் நமக்கு உதவுவார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். இறந்த உடலுடன் தங்கள் சொந்த ஊருக்கு சென்றார்களா எப்படி சென்றார்கள் யார் உதவினார் என்பதே அயோத்தி படத்தின் கதை.
இயக்குநர் மந்திரமூர்த்தி, மனிதம் என்பதை உயர்த்திப் பிடித்திருக்கிறார். மதம், மொழி, இனம் வேறு எந்த விசயமாக இருந்தாலும் மனிதம் மட்டுமே உயர்ந்தது என்பதை படத்தின் மூலம் மக்களுக்கு நினைவூட்டியிருக்கிறார்.
படம் எப்படி இருக்கு?
படம் துவங்கும்போதே நமக்கு பக்திமயமான படமாக தோன்ற வைக்கிறார்கள். அயோத்தியின் அழகை கண்முன்னே கொண்டு வருகிறார்கள். ஜெய் ஸ்ரீராம் எனத் துவங்கும் பாடலோடு நாமும் கதைக்குள் நகர்கிறோம். வெகு நாட்களாகிவிட்டது இதுபோல ஒரு பாடலில் நம்மை படத்துக்குள் நகர்த்தி செல்லும் கலையை காண்பித்த படங்கள் பார்த்து.
அயோத்தியில் துவங்கி படம் ஸ்லோவாக ஸ்டெடியாக பயணித்து தமிழகத்துக்குள் நுழைந்ததும் படம் வேகமெடுக்கிறது. ஆணாதிக்க மனநிலையில் இருக்கும் பல்ராம், தமிழகத்தின் மீது மோசமான கருத்தை வைத்திருக்கிறார். அவர் இங்கு வந்து பார்க்கும்போது அவரின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் இங்கு என்ன நடக்கிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது. வேறு வேறு ஊரைச் சேர்ந்த வேறு வேறு மொழி பேசுபவர்களை இணைக்கும் புள்ளி மனிதம் மட்டுமே என்பதை இயக்குநர் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.
மொழி புரியவில்லை என்றாலும் உணர்வுகள் புரியும். அது எல்லாருக்கும் பொதுவானது. எமோஷனல் வசனங்கள், காட்சிகளைக் கொண்டு இந்த படம் திரைக்கு வந்திருக்கிறது.
சசிக்குமார் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஒரு படி உழைத்து கொடுத்துருக்கிறார் என்று கூட சொல்லலாம். வழக்கமான தனது நடிப்பில் முத்திரையை பதித்துவிட்டு துணைக்கு நடிப்பவர்களையும் தட்டி கொடுத்து வேலையை வாங்கியிருப்பார்கள் போல. உடன் நடிக்கும் அனைவரும் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள். முக்கியமாக பல்ராம் கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகர். அறிமுக நடிகையான ப்ரீத்தி அஸ்ராணி, அத்வைத் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். புகழுக்கு சரியான கதாபாத்திரம் சிக்கியிருக்கிறது அதற்கேற்ற மாதிரி நடித்திருக்கிறார்.
சில பிரச்னைகள் இருந்தாலும் மனித நேயத்தைப் பேசும் இதுபோன்ற படங்கள் மனதுக்கு வருடலாக இருக்கின்றன. நிச்சயம் திரையரங்கில் சென்று காணலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu