என்ன பண்ணாலும் நடக்கமாட்டேங்குதே...! விடாமுயற்சிக்கு முன் திருப்பதி சென்ற அஜித்..!

என்ன பண்ணாலும் நடக்கமாட்டேங்குதே...! விடாமுயற்சிக்கு முன் திருப்பதி சென்ற அஜித்..!
X
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சிக்கு முன்பாக திருப்பதிக்கு சென்றுள்ளார்.

அஜர்பைஜானில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னதாக திருப்பதிக்கு சென்றிருக்கிறார் அஜித். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பெரிய பின்னணி எதுவுமின்றி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து மெல்ல மெல்ல தன்னை செதுக்கிக் கொண்டு வளர்ந்தவர் அஜித்குமார். இப்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் அஜித்குமார், விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

தான் நடிக்கும் படங்களில் ரிஸ்க் எடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது, பைக், கார் சேஸிங் காட்சிகளை அசால்ட்டாக செய்வது என அஜித் பலரையும் படபடக்கச் செய்வதும் வழக்கமான ஒன்று. ஆனாலும் தனது படங்களில் இருக்கும் ரிஸ்க் நிறைந்த காட்சிகளை அவரே நடித்தார் என்கிற திருப்தி அவருக்கு கிடைப்பதால் அதை தொடர்ந்து வருகிறார்.

சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களை பதற வைத்தார். நல்வாய்ப்பாக அதில் பெரிய அடி எதுவுமின்றி தப்பினார் அஜித். விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து தாமதமாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டமே லைகா தரப்புக்கு இத்தனை பிரச்னைகளைக் கொண்டு வருகிறது என்று கூறப்படுகிறது. அதில் இருந்து மீள்வதற்குள் அடுத்தாக இந்தியன் 2 வில் கைவிட்டு அதிலேயும் வாங்கி கட்டிக்கொண்டது லைகா நிறுவனம். இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படமும் அப்படி ஒரு சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது.

லைகா தயாரிப்பு நிறுவனம் எப்படியோ சமாளித்து விடாமுயற்சி படத்தை முடித்து விடுவதென முடிவெடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களில் படம் நிறைவு பெறுவதாக கூறப்படுகிறது. கடைசி கட்ட படப்பிடிப்புக்காக அஜித்குமார் தற்போது அஜர்பைஜான் சென்றுள்ளார். முன்னதாக அவர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

அஜர்பைஜானில் இந்த படப்பிடிப்பு வரும் வியாழன் முதல் தொடங்கி அடுத்த 45 நாட்களுக்கு இடைவிடாமல் நடைபெற இருக்கிறது. இந்த காட்சிகளில் அஜித்குமார், திரிஷா, ரெஜினா, அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படம்பிடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை விரைவில் முடித்துக் கொண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்லும் முன்பு அஜித் திருப்பதி சென்றுள்ளார். ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்றிருந்த அவர், தங்கியிருந்த ஹோட்டல் பணியாளர்களிடம் கைக்குலுக்கி நன்றி தெரிவித்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வரும் நிலையில், அடுத்ததாக நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக மீண்டும் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story