மகள் மீதுள்ள பாசத்தில் இப்படி ஒரு காரியம் செய்த அர்ஜூன்..!

மகள் மீதுள்ள பாசத்தில் இப்படி ஒரு காரியம் செய்த அர்ஜூன்..!
X
கோலாகலமாக நடைபெற்ற நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் யார் யார் கலந்துகொண்டார்கள் என்பதைக் காண்போம்.

நடிகர் அர்ஜூன் தனது மகள் திருமணத்துக்காக செய்த விசயம்தான் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அவர் தனது சொத்தில் பாதியை மகளுக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று இருக்கும் நிலையில், இப்படி தனது செல்வாக்கை காண்பிக்கும் அளவுக்கு சிலர் அதிக வரதட்சணை கொடுக்கும் நிகழ்வுகளும் உண்டு.

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். அவர்கள் சினிமா, பொழுதுபோக்கு உலா என தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த செய்திகள் அவ்வப்போது செய்தித் தாள்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தன.


காதலின் அடுத்த நிலைக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவீட்டு உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்ட சாதாரண திருமணமாகவே இது இருந்தது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

ஆக்ஷன் கிங் என அன்போடு அழைக்கப்படும் அர்ஜூன் நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்தார். இவரிடம் உதவி இயக்குநராக இருந்து பின் நடிகராக அறிமுகமானார் விஷால். தற்போது அர்ஜூன் குணசித்திர கதாபாத்திரங்கள், வில்லன் என தனது நடிப்பை தொடர்ந்து வருகிறார். கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக இவர் நடித்திருந்தார். இப்போது விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


அர்ஜூனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகளான ஐஸ்வர்யாவை பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அர்ஜூன். அதன் பிறகு சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனத்தை தொடர்ந்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் அர்ஜூன். அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தம்பி ராமையாவின் மகன் உமாபதி மீது ஐஸ்வர்யாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பேசத் தொடங்கியிருந்தாலும் பின் அது காதலாக மாறவே, வீட்டில் சொல்லிவிட்டார்கள். இருவரும் நடிப்பு பின்புலத்தில் இருந்ததால் வீட்டில் பெரிய பிரச்னை ஏதும் ஏற்படவில்லை.


இரு வீடுகளிலும் பச்சைக் கொடி காட்டிய நிலையில், இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்யப்பட்டது. பின் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில்தான் நடிகர் அர்ஜூன் தனது மகளுக்கு சொத்தில் பாதியை வரதட்சணையாக கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் அளவுக்கான வரதட்சணையை கொடுத்ததாக ஒரு தகவல் கோலிவுட்டை வலம் வருகிறது. இதுகுறித்து பேசிய பிரபல சினிமா செய்தியாளர் ஒருவர் இதெல்லாம் பொய்யான தகவல்கள். இரண்டு மகள்கள் மட்டுமே இருப்பதால் பாதியை மூத்த மகளுக்கும் மீதியை இரண்டாவது மகளுக்கும் எழுதி வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story