இறந்து ஒரு வாரம் ஆச்சு..! தந்தை மறைவால் மன உளைச்சலில் பிரபல நடிகை..!

இறந்து ஒரு வாரம் ஆச்சு..! தந்தை மறைவால் மன உளைச்சலில் பிரபல நடிகை..!
X
தான் தனது தந்தையை நேசித்ததாகவும் தன் வாழ்நாள் முழுக்க அன்புக்காக ஏங்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பு இறந்துவிட்டதை இன்றுதான் அறிந்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையின் தந்தை இறந்து ஒரு வாரத்துக்கு பிறகே அவருக்கு தெரியவந்துள்ள நிலையில், அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் விசில் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷெரின். இவரின் அழகை கொண்டாடாத இளைஞர்கள் தமிழகத்தில் இல்லை எனலாம். அழகிய அசுரா பாடல் இளைஞர்களின் காதல் கீதமாகவே இருந்தது. அந்த அளவுக்கு பிரபலமான பாடலாக இருந்தது அழகிய அசுரா.


முதன்முதலில் தனுஷ் ஜோடியாக துள்ளவதோ இளமை திரைப்படத்தில் நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான வேடம் என்பதாலும், அழகே உருவான ஒரு கதாபாத்திரம் என்பதாலும் தமிழ் ரசிகர்களிடையே ஒரே படத்தில் பிரபலமானார். விசில் படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அவரின் அறிமுகம் கிடைத்தது. நெகடிவ் கதாபாத்திரமாக பழிவாங்கும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

விசில் திரைப்படம் இப்போது பார்த்தாலும் குழந்தை பருவ நினைவுகளை நமக்கு கொண்டு வரும். ஆனால் அதன்பிறகு பெரிய அளவில் வரவேண்டியவர், சரியான கதைத் தேர்வு இல்லாததால் மார்க்கெட் இழந்தார். பின் தமிழில் சில படங்களில் தலைகாட்டினார். ஆனால் இவரை தமிழ் மக்கள் மீண்டும் கொண்டாட ஆரம்பித்தது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான்.


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரிலேயே சிறந்த சீசன் என்று போற்றப்படும் 3வது சீசனின் 3வது ரன்னராக வெற்றிபெற்றார். கிளைமேக்ஸ் எபிசோட் வரை அவர் நிகழ்ச்சியில் இருந்தார். அவரும் கவின், சாண்டி, தர்ஷன், லாஸ்லியா என போட்டியாளர்கள் செய்த கலாட்டா தமிழ் மக்களால் இன்றும் நினைவு கூரத் தக்கவகையில் அமைந்துள்ளன.

அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் மார்க்கெட் உயரத் தொடங்கியது. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிக எதிர்பார்ப்பு கொண்ட போட்டியாளராக இருந்தார். கோமாளிகளுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகள் சுவாரஸ்யமானதாக இருந்தன. விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார் ஷெரின். அவரின் தமிழ் உச்சரிப்பும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.


வெற்றிக்காக போராடுவதிலும் அவர் வல்லவர்தான். அவரின் போராட்ட குணம் அவரிடம் பிடித்த ஒன்றாக பலரும் கூறியுள்ளனர்.

ஆனால் அவரே நொந்து அழும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரின் தந்தை இறந்து ஒரு வாரம் கழித்தே அவருக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. நடிகை ஷெரின் தன் தந்தை தங்களுடன் இல்லை எனவும், அவரை அவர் தாய் மட்டுமே வளர்த்தார் எனவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் அவர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக அவரது தந்தை மரணமடைந்திருக்கிறார். ஆனால் இந்த தகவல் இவருக்கு தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. இதனால் மனமுடைந்து போயுள்ளார் ஷெரின். தந்தை மரணம் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தன் தந்தை மரணம் குறித்தும் தன் நிலை குறித்தும் எழுதியுள்ளார்.


அந்த பதிவில், தான் தனது தந்தையை நேசித்ததாகவும் தன் வாழ்நாள் முழுக்க அன்புக்காக ஏங்கியதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்துக்கு முன்பு இறந்துவிட்டதை இன்றுதான் அறிந்ததாக கூறியுள்ளார். இதயம் உடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் உங்களை நேசித்தேன், என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பிற்காக ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்துவிட்டீர்கள், இன்று தான் நான் அறிந்தேன், அது என் இதயத்தை இன்னும் உடைக்கிறது.

இந்த படம் தான் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்ததெல்லாம். இந்த படம் தான் என்னிடம் எப்போதும் இருக்கும். நான் உங்களை இழக்கிறேன். rest in peace."

இவ்வாறு இவர் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story