இனி தியேட்டருக்கே போக வேண்டாம்; வீட்டிலேயே தியேட்டர் எபெக்ட்டில் படம் பார்க்க வாய்ப்பு!

சோனி நிறுவனம் எக்ஸ்82எல் (Sony BRAVIA X82L) என்ற புதிய ஸ்மார்ட் டிவியை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Update: 2023-06-07 02:14 GMT

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சோனி அறிமுகப்படுத்திய Sony BRAVIA X82L டிவி.

தனித்துவமான டிஸ்ப்ளே அம்சங்களுடன் டிவிக்களை தயாரிப்பதில் பெயர் போன நிறுவனமான சோனி இந்தியாவில் என்றென்றும் முதலிடத்திலேயே உள்ளது. என்ன தான், புதுப்புது நிறுவனங்கள் சந்தையில் களம் இறங்கினாலும், சோனி பிராண்ட் டிவிக்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகம், குறிப்பாக அதன் பிராவியா சீரிஸ் டிவிக்கள் முற்றிலும் தனித்துவமான டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது.

இதன் மூலம் வீட்டிலிருந்தபடியே தியேட்டர் அனுபவத்தை பெறலாம். இந்த பிராவியா சீரிஸில் முன்னதாக பல்வேறு மாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, எக்ஸ்82எல் (Sony BRAVIA X82L) என்ற புதிய ஸ்மார்ட் டிவியை சோனி நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த டிவிகள்,. 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மூன்று ஸ்மார்ட் டிவிக்களும் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. இதன் டிஸ்ப்ளே அம்சத்தை பொறுத்த வரை, டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்(HDR), டிரிலுமினஸ் (Triluminous) ப்ரோ அல்காரிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அக்கோஸ்டிக் மல்டி ஆடியோ (Acoustic Multi Audio) வசதி இருப்பதால் நமக்கு நேரடியாக இருந்து கேட்பது போன்ற அனுபவம் தரும்.

இதுதவிர ஆடியோ அம்சம் பற்றி பார்க்கும் பொழுது, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சவுண்ட் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த டிவிக்கள் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தையே நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சோனி பிராவியா எக்ஸ்82எல் ஸ்மார்ட் டிவிக்கள் கூகுள் டிவி ஒஎஸ் (இயங்குதளம்) மூலம் இயங்குகின்றன. அதுபோக இந்த டிவியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும். மேலும் இவற்றில் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

இதுதவிர, இவற்றில் பிராவியா கோர் ஆப் (Bravia Core App) மூலம் நம்மால் 12 மாதங்களுக்கு 4K Blu-Ray தரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யலாம். இதன் மூலமாக டால்பி அட்மாஸ் மற்றும் IMAX தரத்தில் படங்கள் பார்க்கலாம்.

இதுதவிர, வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, ஆப்பிள் ஏர்பிளே, ஹோம்கிட் போன்ற பல்வேறு சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. அதோடு, X-Protection PRO தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த எக்ஸ்82எல் டிவியில், சோனியின் சொந்த தயாரிப்பான PS5 கன்சோலை சுலபமாக கனெக்ட் செய்யலாம்.

சோனி பிராவியா எக்ஸ்82எல் ஸ்மார்ட் டிவி கடந்த ஜூன் 2 முதல் 55 மற்றும் 65 இன்ச் டிவி விற்பனை தொடங்கியுள்ளது. இதன் 55-இன்ச் டிவி ரூ.91,900 என்ற விலையிலும் 65-இன்ச் ரூ.1,24,990 என்ற விலையிலும் விற்பனைக்கு செய்யப்படுகிறது. ஆனால் 75 இன்ச் மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

Similar News