மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

Update: 2022-01-13 01:33 GMT

பிரதமர் மோடி திறந்த விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் குத்துவிளக்கேற்றி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020 மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசு 60 சதவிகித பங்கு தொகையாக ரூ.195 கோடியும் மாநில அரசு 40 சதவிகித பங்கு தொகையாகரூ.130 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் செலவினங்களுக்காக மாநில அரசு சார்பில் ரூ.55 கோடி அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.390.22 கோடியில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.நடப்பாண்டு 150 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள

இதன் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்தபடியே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலை வகித்தார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றினார்.

பின்னர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் நாகர்கோயில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் டீன்  மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News