விருதுநகர் விற்பனைக்குழு, வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-10-04 15:15 GMT

விருதுநகர் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட  வியாபாரிகள். 

விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை செஸ் வரி விதித்து வசூல் செய்கிறது. இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் விளையாத விவசாய பொருட்களுக்கு வரி விதிப்பதாக குற்றம் சாட்டி வியாபாரிகள் விற்பனைக்குழு, வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, வரிவிதிக்க கூடாது என முறையிட்டனர். முறையான ரசீது பார்ட்டி மேல் போட வேண்டும், லாரியை சீஸ் செய்யக்கூடாது, லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் என பார்ட்டி அல்லாதவர்கள் மேல் போடக்கூடாது;வேளாண் விளைபொருள் சட்டம், மல்லி, உளுந்துக்கு மார்க்கெட்டி கமிட்டி கட்டணம் வசூலிக்க கூடாது, கெஜட் மூலம் வர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உள்ளது என வலியுறுத்தினர். இதில், உளுந்து, மல்லி வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட விருதுநகர் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News