விருதுநகர் மாவட்ட தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் நேரடி சேர்க்கை: ஆட்சியர் தகவல்

அரசுஃதனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் 2021-ம் ஆண்டிற்கான நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி., தகவல்.

Update: 2021-11-11 14:00 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் 2021-ம் ஆண்டிற்கான நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தகவல்.

விருதுநகர் மாவட்ட அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் Online கலந்தாய்வு மூலம் 30.10.2021 முடிய நேரடிச் சேர்க்கை நடைபெற்றது. தற்போது காலியாக உள்ள கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நேரடிச்சேர்க்கை மூலம் பயிற்சியில் சேர 18.11.2021 முடிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ( இயந்திர வேலையாள்-3 , கம்மியர் இயந்திர கலப்பை-14, தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை-9, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல்-10).

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/–யை நேரடியாக செலுத்தி தங்களுக்கு விருப்பமான மேற்காணும் தொழிற்பிரிவுகளில் மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சேர்க்கை கட்டணமாக ஓராண்டிற்கு ரூ.185/-ம் ஈராண்டிற்கு ரூ.195/-ம் ரொக்கமாக நேரில் செலுத்தி சேரலாம்.

இந்நேரடி சேர்க்கைக்கு தகுதியுள்ள மாணவ / மாணவிகள் பின்வரும் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து உரிய இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பித்து பயிற்சிக்கான சேர்க்கை ஆணையினை பெற்றுக் கொள்ளலாம். (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 5 எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம்)

மேலும் விபரங்களுக்கு, விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : 04562-294382 ஃ 252655. என்ற எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி., தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News