100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனடி ஊதியம் வழங்க வேண்டும்: எம்பி., மாணிக்கம் தாகூர்

100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும். விருதுநகரில் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி.

Update: 2021-11-12 10:45 GMT

விருதுநகரில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர் பேட்டி.

விருதுநகரில் அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர் பேட்டி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் விருதுநகர் பாரளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனுஷ்குமார், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், எம்பியுமா மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், மோடி அரசு 4 மாதங்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை, ஊதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், இதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்,

இடைத்தேர்தலான ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வியையடுத்து எம்பி நிதியை மீண்டும் மத்திய அரசு வழங்கியிருக்கிறார்கள். எம்பி நிதியை உயர்த்தக்கோரி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தி.நகரை சிங்கப்பூராக ஆக்குவேன் என்று எடப்பாடி கூறியது அவர் கண் முன்னாடியே தெரிகிறது. அதிமுக ஆட்சியின் ஊழலால்தான் சென்னை இப்போது இவ்வளவு பாதிப்பு என பேட்டியின்போது தெரிவித்தார்.

Tags:    

Similar News