ரூ.24 லட்சம் மதிப்பில் நுண் உரம் தயாரிக்கும் மையம்: ஆட்சியர் திறந்து வைப்பு

விருதுநகரில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தினை ஆட்சியர் மேகநாதரெட்டி திறப்பு.

Update: 2021-11-25 08:33 GMT

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ்அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.

மேலும் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையத்தினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக, தூய்மை காவலர்கள் மூலமாக ஊரகப்பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை சேகரித்து, மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை கொண்டு நுண் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள மேலராஜகுலராமன், தெற்குவெங்காநல்லூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சித்துராஜபுரம், விஸ்வநத்தம் மற்றும் ஆனையூர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஆகிய 6 இடங்களில் தலா ரூ.24 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.1.44 கோடி மதிப்பில் நுண் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்டமாக விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் தயாரிக்கும் மையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நுண் உரம் தயாரிக்கும் மையம் சந்தை கழிவுகளை அப்புறப்படுத்தும் விதமாகவும், அந்த கழிவுகள் மூலம் உரம் தயாரித்து விற்பனை செய்யும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய பெருமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திலகவதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News