ரூ.15 லட்சம் மதிப்பில் சிறுநீரகக்கல் அகற்றும் இயந்திரம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகர் அரசு மருத்துவமனையில் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் இயந்திரத்தை ஆட்சியர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

Update: 2021-12-09 13:41 GMT

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய சிறுநீரகக்கல் அகற்றும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய சிறுநீரகக்கல் அகற்றும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டிபொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

தற்பொழுது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஒமைக்ரான் சிறப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் MCH பகுதி இரண்டாம் தளத்தில் நுண்கதிர் அதிர்வலை மூலம் சிறுநீரகக் கல் உடைக்கும் சிகிச்சை(ESWL) இயந்திரம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுநீரகக் கல் பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி கல் நீக்கம் செய்யப்படும். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இச்சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், ஒமைக்ரான் வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திடும் வகையில், தனிமைப்படுத்தப் பட்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தில் முதல் கட்டமாக, 12 ஆக்சிஜன் வெண்டிலேட்டர்கள் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒமைக்ரான் சிகிச்சை பிரிவிற்கும், கொரோனா சிகிச்சை பிரிவிற்கும் தனித்தனியாக படுக்கை வசதிகள் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, கண்காணிப்பாளர் பழனிக்குமார், துணை கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவர் அரவிந்த்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News