விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூ 65 லட்சத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

Update: 2022-05-01 05:15 GMT

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில்  ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் 

விருதுநகர் மாவட்டத்திலேயே முதல் முறையாக அருப்புக்கோட்டையில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம். அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் சாயமேற்றும் பணியில் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் மாவட்டத்திலேயே முதன்முறையாக சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையம் அருப்புக்கோட்டை சொக்கலிங்க புரத்தில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் சாயக்கழிவு நீரால் பாதிக்கும் அபாயம் முக்கியமாக தடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் அருப்புக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கூட்டுறவு கைத்தறி பட்டு நூல் காண சாயக்கழிவு ஏற்றும் பணியில் வெளியாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் மறுசுழற்சி செய்வதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுத்திகரிப்பு நிலைய மேலாளர் கணேசன் கூறியதாவது, தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் இறைத்த நீர் பாதிக்கப்படுவது பொது மக்கள் பெரும் நோய் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் முறை மூலம் நீர் சிக்கனம் படுத்தபடுகிறது. மேலும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News