விருதுநகரில் மாவட்ட அளவிலான தடகள போட்டி: ஆட்சியர் துவக்கி வைப்பு

விருதுநகர் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் 2021 போட்டியை ஆட்சியர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-03 11:49 GMT

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன்ஷிப் 2021 போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தொடங்கி வைத்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித விளையாட்டுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், தகுதியான வீரர்களை கண்டறியவும் தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் தேவாரம் ஐ.பி.எஸ் மற்றும் செயலாளர் லதா ஆகியோர் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்ட அளவில் தடகள வீரர்களை தேர்ந்தெடுக்கும் விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் 700 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஜூனியர், பிரிவுகளில் நடைபெறும் இந்த தடகள போட்டிகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஒலிம்பிக் தீபமேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய ஆட்சியர், ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும் என்றும் சிறந்த விளையாட்டு வீரர்களை முன்னுதாரணமாக கொண்டு சிறந்த பயிற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம் என்றும் குறிப்பாக கிரிக்கெட் வீரர் தோனி இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கையாக திகழ்வதையும் சுட்டிக் காட்டினார். விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குவதைபோல் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதிலும் முதன்மையாக திகழ வேண்டும் என்றார்.

இப்போட்டிகள் நாளையுடன் நிறைவடைகிறது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் நாளை நடைபெறும் நிறைவு விழாவில் வழங்கப்பட உள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அத்லெட்டிக் கூட்டமைப்பு சேர்மனும் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் மற்றும் செயலாளர் சிவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News