பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

Update: 2021-11-30 13:58 GMT

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

விருதுநகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு எம் பிளாயி பெடரேஷன் மாநில தலைவர் மணிகண்டன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்பிட வேண்டும், அடிப்படை பதவிகளான கள உதவியாளர்கள், கம்பியாளர்கள் பணியிடங்களை நிரப்பிடவும், மின்வாரிய பணிகள் தொய்வின்றி நடைபெற தளவாட சாமான்கள் தேவையான அளவு சப்ளை செய்திடவும், அனைத்து பிரிவு பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் விருப்ப மாறுதல் உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும்

மேலும் கடந்த 1 .12.2019 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை உடனடியாக தமிழக அரசாங்கம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த நிகழ்சியில் மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த செளந்திர பாண்டியன், பொறியாளர் மற்றும் தொழிலாளர் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த வெங்கடாஜலபதி, மின்வாரிய அண்ணா தொழிற்சங்க பிரிவு ஜெய்சங்கர், மின்வாரிய பொறியாளர் குழுமம் ராஜ்குமார், பொறியாளர் கழகம் ஜாகிர் உசேன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News