பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கோரி தர்ணா

பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2021-12-14 03:25 GMT

பணியின்போது இறந்த துப்புரவு தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் துப்புரவு பணிகளை செய்து வந்த சுப்பிரமணியன் கடந்த அக்டோபர் மாதம் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி இறந்தார்.

அவர் துப்புரவு பணியில் ஈடுபட்ட பொழுது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் நகராட்சி நிர்வாகத்தால் அளிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையை இறங்கி சுத்தம் செய்ததால் விஷவாயு தாக்கி இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எந்த ஒரு உபகரணங்களும் தராமல் சாக்கடைக்குள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கையால் மலம் அள்ளும் சட்டம் தடுத்தல் சட்டத்தின்படி ரூ. 25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News