விருதுநகர் அருகே பட்டாசு கடையில் 204 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் 204 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-26 13:23 GMT

விருதுநகர் அருகே கவலூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை சரக டிஐஜி அலுவகத்திற்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து மதுரை சரக டிஐஜி தலைமையிலான தனிப்படை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சிவகாசி செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் விற்பனை செய்ய 204 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பட்டாசு கடையிலிருந்து கஞ்சா விற்பனை செய்து சிவசாமி மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கஞ்சா விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News