'பிக்பாஸ் 6' டைட்டில் வின்னர் ஆகப்போவது திருநங்கை ஷிவினா?

bigg boss season tamil 6, shivin bigg boss‘பிக்பாஸ் 6’ டைட்டில் வின்னர் ஆகப்போவது திருநங்கை ஷிவினா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-12-16 08:04 GMT

bigg boss season tamil 6, shivin bigg bossதிருநங்கை ஷிவின்.

bigg boss season tamil 6, shivin bigg bossவிஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 6 சீன் தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து 6வது சீசன் இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

bigg boss season tamil 6, shivin bigg bossபிரபல இந்திய தொலைக்காட்சியில் சத்யா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஆயிஷா, விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.


bigg boss season tamil 6, shivin bigg bossபிக்பாஸ் வீட்டுக்குள் சுமார் 60 நாட்களுக்கு மேல் இருந்த ஆயிஷா, கடந்த வாரம் ரசிகர்களிடம் இருந்து குறைவான வாக்குகளைப் பெற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷா, பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது 6ஆவது சீசன் 65 நாட்கள் கடந்த நிலையில் ஷிவின் தான் டைட்டில் வின்னர் ஆவார் என ஆயிஷா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

bigg boss season tamil 6, shivin bigg bossஇந்த  நேர்காணலில் முதலில் நிகழ்ச்சியின் நெறியாளர், விக்ரமன் மற்றும் அசீம் குறித்த கருத்துக்களை ஆயிஷாவிடம் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த ஆயிஷா, கேள்வியை பாஸ் செய்யுமாறு ஜாலியாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய ஆயிஷா, அனைவரும் விக்ரமன் மற்றும் அசீம் குறித்துதான் அதிகம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.

bigg boss season tamil 6, shivin bigg bossஅதற்கு நெறியாளர், "அசீமுடன் பல நேரங்களில் நல்ல ஒரு பிணைப்பு உங்களுக்கு இருந்தது, மற்ற நேரங்களில் அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டீர்கள். அதேபோல நீங்கள் வெளியே வரும்போது விக்ரமன் ஏதோ சொல்ல வர, நீங்கள் "ஓகே.." என சொல்லி இருந்தீர்கள். உங்கள் பார்வையில் அசீம் மற்றும் விக்ரமன் குறித்து சொல்லுங்கள்" என கேட்கிறார்.

bigg boss season tamil 6, shivin bigg bossஇதன் பின்னர் பேசும் ஆயிஷா, "நான் இதை பத்தி பிக்பாஸ்க்கு வீட்டுக்குள்ளே நிறைய பேசி இருக்கேன். வெளியே பேசுவது புதுசு இல்ல. அசீம் அண்ணாவுக்கு பிக்பாஸ் அப்படின்னா என்ன என்று நல்லாவே தெரியும். எல்லாம் தெரிஞ்சவரு. கரெக்டா விளையாடிட்டு இருக்காரு எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே அவரோட கேமுக்கு நடுவுல நம்மள யூஸ் பண்ற மாதிரி ஒரு கேம் வரும் என்கிறார்.

bigg boss season tamil 6, shivin bigg bossதொடர்ந்து டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என கேட்கும்போது, "ஷிவின்" பெயரை சொன்ன ஆயிஷா, இதை தான் பிக்பாஸிலும் சொன்னதாக தெரிவித்ததுடன், 3 பேர் பெயரை சொல்லலாம் என கேட்டபோதும், ஷிவின் பெயரை முன்மொழிந்தார்.

திருநங்கை மாடலான ஷிவின் பிக்பாஸ் தமிழ் சீசன் 6ல் அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 60 நாட்களை கடந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News