அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவம் மூன்றாம் நாள்

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மூன்றாம் நாள் வசந்த உற்சவமாக உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Update: 2021-04-20 05:15 GMT

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் ஆகவும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் சித்திரை மாத வசந்த உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது 10 நாட்கள் மிகவும் விமர்சையாக இந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம் நேற்று 3-வது நாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

விழாவின் 3-வது நாளான நேற்று இரவு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தினை பத்து முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஒவ்வொரு சுற்றில் மூன்று முறை பாவை என்று அழைக்கப்படுகின்ற பொம்மை அந்தரத்தில் மிதந்து வந்து தன் கையில் வைத்திருக்கும் பூக்கூடையில் இருந்து பல வாசனை மலர்களை அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு காற்றில் மிதந்தபடி பூ போடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் .

மற்ற சிவாலயங்களில் கந்தர்வ பொம்மைதான் சுவாமிக்கு பூ போடுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஆனால் அண்ணாமலையார் ஆலயத்தில் மட்டுமே சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள் நாச்சியார் அம்சமான பாவை என்கிற பெண் பொம்மை அண்ணாமலையார் மலர்களைத் தூவுவது கண்கொள்ளாக் காட்சியாக நிகழ்கிறது.

பொம்மை பூ போடும் நிகழ்வை பார்த்த குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. பார்த்த குழந்தைகள் அனைவரும் ஆனந்தத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

அதனை தொடர்ந்து அண்ணாமலையார் 10 முறை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News