திருவண்ணாமலை: தூய்மை பணியாளர் பணியிட நேர்காணலுக்கு வந்த பட்டதாரிகள்

Today Interview -திருவண்ணாமலையில் நடந்த தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்குக்கான நேர்காணலில் பட்டதாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

Update: 2022-06-24 02:23 GMT

திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்றது

Today Interview -திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் காலியாக உள்ள 23 தூய்மை பணியாளர்கள் பணியிடங்களுக்கான நேர்காணல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக விண்ணப்பித்து இருந்த 422 பேருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நேர்காணல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் குமரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன் ஆகியோர் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வு குழுவின் தலைமையில் நடந்தது.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் பணியாளர்களும் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்தனர். இதில் தேர்வு செய்யப்படுபவர்களின் பெயர் பட்டியல் வருகிற 30-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் இந்த பணியிடத்திற்கு பட்டதாரிகள் வரை விண்ணப்பித்து இருந்தனர். நேர்காணலுக்கு ஏராளமான பட்டதாரிகள்,முதுகலை பட்டதாரிகள் வந்து இருந்ததை காணமுடிந்தது. ஒரு சில பொறியியல் பட்டதாரிகளும் வந்திருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News