திருவண்ணாமலை பேருந்து நிலைய பணிகள் விரைவில் துவக்கம்: அமைச்சர் உறுதி

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதால் விரைவில் பணிகள் துவங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Update: 2022-02-06 01:35 GMT

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் தேர்தல் பணிமனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் தேர்தல் பணிமனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  திறந்து வைத்து பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர், திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும். அதேபோல் அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதி, திருப்பதி போல் கான்கிரீட் சாலையாக மாற்றப்பட உள்ளது. அந்த பணியும் விரைவில் துவக்கப்பட உள்ளது.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது மட்டும் தான் திருவண்ணாமலை நகரம் வளர்ச்சி அடைகிறது.  இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு,  பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், 10வது வார்டு திமுக வேட்பாளர் பொறியாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News