திருவண்ணாமலை- அரூர் 4 வழி சாலைப்பணிகள் தீவிரம்

Tiruvannamalai News Today- தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்குவழி சாலைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-02-01 00:24 GMT

விரைவாக நடந்து வரும் சாலைப்பணிகள்.

Tiruvannamalai News Today- தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலையிலிருந்து அரூர் வரை செல்லும் நான்குவழி சாலைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களிலும், திருவிழாக் காலங்களிலும் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அதுபோன்ற நாட்களில், போக்குவரத்து அதிகம் இருக்கும். தண்டராம்பட்டு, தானிப்பாடி போன்ற பெரிய கிராமங்கள் வழியாக ஊருக்குள் வருகிறபோது, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்க்க இந்த சாலையை பைபாஸ் சாலைகளுடன், நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து, தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை நான்குவழிச்சாலை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இதற்காக, திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு வரை செல்லும் சாலையில், இருபுறமும் இருந்த புளிய மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு, தரைப்பாலங்கள் அமைத்து நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே ரோட்டின் குறுக்கே, சாத்தனூர் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய் இணைப்புக் குழாய்கள் பழுது பார்க்கப்பட்டு தரைப்பாலங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்காக, ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இந்த சாலை விரிவாக்க பணியில் பணியாளர்கள், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இத்திட்டப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த பணி மிக விரைவில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையும். இந்த நான்கு வழி சாலைப் பணிகள் முடிவடைந்த பிறகு, திருவண்ணாமலையில் இருந்து அரூர், சேலம் போன்ற நகரங்களுக்கு விரைவாக செல்ல முடியும், போக்குவரத்து இடையூறுகள் குறையும்,  எனத் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News