தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு சிறப்பு விருந்து

தீபக் திருவிழாவின்போது தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் உணவு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2022-12-09 01:03 GMT

நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய நகர மன்ற தலைவர்.

மகா தீபம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந் தேதி இரவு முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவல சென்ற வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பாடாத வகையில் கிரிவலப்பாதை உடனுக்குடன் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டன.

இதனால் கிரிவலப்பாதை மிகவும் தூய்மையாக காணப்பட்டது. கிரிவலம் சென்ற பக்தர்கள் உடனுக்குடன் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை பாராட்டினர்.

கிரிவலப் பாதையை தூய்மை பணி மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு வந்தனர்.

 தூய்மை பணியில் ஈடுபட்ட அவர்களை திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பாராட்டி உணவு மற்றும் பரிசுகள் வழங்கி வழி அனுப்பும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.  மேலும் அவர்களுக்கு உணவை பரிமாறினார்.

அப்போது நகரமன்றத் துணைத்தலைவர் ராஜாங்கம், தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர், நகராட்சி மேலாளர் பிரகாஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News