வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அரசு முதன்மை செயலாளர் ஆய்வு

திருவண்ணமலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-11-10 00:07 GMT

சேத்துப்பட்டில் சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்த முதன்மை செயலாளர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திருவண்ணாமலையில் வேங்கிக்கால் முதல் கீழ்நாத்தூர் ஏரி வடிகால் வழியாக நீர் செல்லும் பாதையினை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆய்வு செய்தார்.

பின்பு சேத்துப்பட்டு வட்டம் நரசிங்கபுரம் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சேதமடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த விவசாயிகளிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். கன மழையினால் பாதிக்கப்பட்டுபுனித தோமையர் மருத்துவமனை மற்றும் தொழுநோய் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்றது.         

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் , கூடுதல் ஆட்சியர் பிரதாப் , உதவி ஆட்சியர் கட்டா ரவிதேஜா,  கோட்டப் பொறியாளர்கள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள்,  நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News