திருவண்ணாமலை அருகே ஏடிஎம்-ஐ உடைத்த நபர் நான்கு மணி நேரத்திற்குள் கைது

வெறையூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-31 06:15 GMT

ஏடிஎம்மில் திருட முயன்ற நபரை கைது செய்த காவல்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் உடைக்கப்பட்டு இருப்பதாக அருணை பொறியியல் கல்லூரி இந்தியன் வங்கி கிளை மேளாலர் வெறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின்படி, திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மேற்பார்வையில், வெறையூர் வட்ட காவல் ஆய்வாளர் அழகுராணி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு அருகில் இருந்த CCTV கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.

வேட்டவலம் ரோடு, விஜயாமால் எதிரே மறைந்து இருந்த திருவண்ணாமலை வட்டம், தென்மாத்தூர் கிராமத்தை சேரந்த உபேந்திரன்  என்பரை கைது செய்து விசாரனை செய்தனர். அருணை பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் கடன் கேட்டதாகவும் அதனை வங்கி தரப்பில் தரமறுத்ததாகவும், மேலும் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அருணை பொறியியல் கல்லூரியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்-ஐ இரவு சுமார் 01.00 மணியளவில் கடப்பாறை, கொடுவா மற்றும் திருப்புளி கொண்டு ஏடிஎம்-ல் இருந்த CCTV கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் ஏடிஎம்-யை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்.    அப்போது பணம் இருந்த பெட்டியை உடைக்க முடியாதபோது பின்னர் அங்கே யாரோ ஒருவர் வருவது போல் இருந்ததால் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டதாக தெரிவித்தார். இவரை குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags:    

Similar News