19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகங்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது

Update: 2023-01-27 09:57 GMT

கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றிய சிவாச்சாரியார்கள்

சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பச்சையம்மன் மன்னர்சாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 20 யாக குண்டங்களில் 4 நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜனவரி 27) நடைபெற்றது. இன்று அதிகாலை கோ பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, நான்கு கால பூஜைகள் முடிந்து யாகசாலையில் பூரணாகதி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாக சாலையில் உள்ள புனித நீர் சிவாச்சாரியார்களால் கொண்டுவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயிலில் உள்ள கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு திருக்கோயில் தலைவர் வழக்கறிஞர் பழனி தாலுக்கா வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் மற்றும் கோயில் நிர்வாகிகள் பிரசாதங்களை வழங்கினர்.

திருவண்ணாமலை கோபால பிள்ளையார் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் 25ஆம் தேதி காலை துவங்கியது. இன்று காலை 8 மணி அளவில் கோபால பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அரசு வழக்கறிஞர் புகழேந்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சேகரன், மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி:

ஆரணி சைதாப்பேட்டையில் கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி-சைதாப்பேட்டை பகுதியில்  சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அம்மன் கோவில் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது புதிதாக ராஜ கோபுரத்துடன், கங்கை அம்மன் கோவிலை புதுப்பித்து, குளம் சீரமைத்து, கோவில் வளாகத்திலேயே அமிர்தாம்பிகை சமேத கங்காதீஸ்வரர், மகா கணபதி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், அய்யப்பன், வீரஆஞ்சநேயர், நவக்கிரக சன்னதி, காலபைரவர், புத்திர காமேஸ்வரி அம்மன், நாகாத்தம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் புதிதாக அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது.

பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை பூதகன வாத்தியங்கள், மங்கள வாத்தியங்களுடன் கோவில் வளம் வந்து ராஜகோபுரம், கருவறை கோபுரம், முகப்பு கோபுரம் மற்றும் பரிவார சன்னதியின் கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.

தொடர்ந்து சாமிகளுக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை நடைபெற்றது. புனிதநீர் தெளிக்கும்போது ஓம் சக்தி மகா சக்தி என கோஷங்கள்எழுப்பி பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News