திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன்26 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 26 ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2022-06-06 13:18 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 26 ம் தேதி நடைபெற உள்ளது.

சாலை விபத்து இழப்பீடு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள், மின்சார பயன்பாடு, குடிநீர் மற்றும் வீட்டு வரி வழக்குகள் போன்றவை லோக் அதாலத் என்று கூறப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தெரிவிக்கையில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் வரும் 26 ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும்.

சாலை விபத்து இழப்பீடு தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் மின்சார பயன்பாடு, வீட்டு வ,ரி குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில வரி வழக்கு, தொழிலாளர் நலன் இழப்பீடு, வழக்குகள் கல்விக் கடன், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் அப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சம்பந்தப்பட்டவர்கள் விசாரணையில் நேரடியாக பங்கேற்று சமாதானமாகவும் விரைவாக முடிக்க கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இழப்பீடு பிரச்சினை மற்றும் இதர பிரச்சனைகளை இருதரப்பு முன்னிலையிலும், சம்மதத்துடனும் விரைவில் தீர்க்க மக்கள் நீதிமன்றங்கள் வழிவகை செய்யும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News