மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் துவக்கம்

திருவண்ணாமலையில் மலைவாழ் மக்களுக்கான நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்கள் அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-11-26 15:20 GMT

நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் மலைவாழ் மக்களுக்கான 2 நடமாடும் சிறப்பு மருத்துவ வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு  அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,  கலெக்டர்  முகேஷ் , திருவண்ணாமலை எம்பி  அண்ணாதுரை , சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி,  சரவணன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி , மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி , கூடுதல் ஆட்சியர் பிரதாப்,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News