திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-03-25 07:10 GMT

திருவண்ணாமலை இளம் எழுத்தாளர் கவிஞர் சரவணனை பாராட்டி எ. வ. வே. கம்பன், சான்றிதழ்களை வழங்கினார்

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின்  69வது பிறந்த நாள் விழா தூய்மை அருமை வளாகத்தில் நடைபெற்றது.  கம்பன் தமிழ்ச் சங்க செயலாளர் சண்முகம் வரவேற்றார்கெங்குசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி தாளாளர் சின்ராஜ் தலைமை தாங்கினார்.

நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.69 கலைஞர்கள் முதல்வரை வாழ்த்தி கவிதை வாசித்தனர்.

அருணை மருத்துவக் கல்லூரி இயக்குனர் எ. வ. வே. கம்பன் 69 கவிஞர்களுக்கு சிறப்பு ஆடை அணிவித்து சிறப்புரையாற்றினார்.அப்போது நம்முடைய முதல்வர் தமிழக மக்களின் நலனுக்காக ஆற்றி வருகின்ற தொண்டுகள் சேவைகள் மக்கள் நலப் பணித் திட்டங்கள் இந்தியாவிலேயே வேறு எந்த முதல்வரும் செய்யாதவை.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் காட்டிய பாதையில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கி வருகிறார். தியாகம் ,உழைப்பு ,எழுத்தாற்றல், தொண்டு ,சேவை ,போராட்ட குணம் என பன்முகம் கொண்டவர் முதல்வர் என பேசினார்.

நிகழ்ச்சியில் கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, ஆகியோர் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News