கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-26 06:38 GMT

வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம், இணை இயக்குனர் மற்றும் துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வேளாண்மை இணை இயக்குனர் பாலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில பகுதிகள் கண்டறிதல், தென்னங்கன்றுகள் நடவு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து பண்ணைக் குட்டைகள் அமைப்பது, இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தகவல் பலகை பொருத்துவது மற்றும் தண்டோரா மூலம் இத்திட்டத்தினை கிராம விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் எடுத்துரைத்தார். மேலும் வேளாண்மை அறிவியல் மைய விஞ்ஞானிகள் மண்வள மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றி எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய அரசு திட்டம்) ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர்பாசனம்) வடமலை, வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) மாரியப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அறிவியல் மைய விஞ்ஞானிகள் ரமேஷ்ராஜா, நாராயணன், திருவண்ணாமலை மண்டல வட்டாரத்திற்கு உட்பட்ட வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News