திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Today Electricity News - திருவண்ணாமலையில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-27 02:39 GMT

 மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Today Electricity News - திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மின்வாரிய ஊரியர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்திற்கு மின்வாரிய மத்திய அமைப்பின் மாநில செயலாளர் காங்கேயன் தலைமை தாங்கினார்.

மின்வாரிய தொழிலாளர் சம்மேளனத்தை சேர்ந்த சம்பத், அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்த துரை, மின்வாரிய பொறியாளர் சங்கத்தை சேர்ந்த சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இதில் பங்கேற்றவர்கள் மின்சார ஊழியர்களின் அனைத்து விதமான உரிமைகளை, சலுகைகளை பறிக்கும் வாரிய உத்தரவு 2ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இந்த காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு உறுப்பினர்கள் ,மின்சார வாரிய ஊழியர்கள், எம்பிளாய்மென்ட் ஃபெடரேஷன் உறுப்பினர்கள் ,அதிகாரிகள் கலந்து கொண்டனர்

ஊழியர்களின் போராட்டத்தினால் நகரின் சில பகுதிகளில் மின் குறைபாடு ஏற்பட்டாலும் அதை சென்று சரி செய்ய ஆட்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News