திருவண்ணாமலை நகராட்சி முதல் பெண் தலைவர்: நிர்மலா கார்த்திக் வேல்மாறன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

Update: 2022-03-03 08:12 GMT

திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள  நிர்மலா கார்த்திக் வேல்மாறன் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 123 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 149 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.   திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளை 10 பேரூராட்சி களையும் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளனர்.  ஆரணி நகராட்சித் துணைத்தலைவர் பதவி திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள தலைவர் பதவி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் பேரூராட்சி மன்ற தலைவர்கள் நகராட்சித் தலைவர்கள் விவரங்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.    அதன்படி 

பேரூராட்சிகள்                        

செங்கம் -                                  சாதிக் பாட்சா

களம்பூர் -                                 பழனி

சேத்துப்பட்டு -                          சுதா முருகன்

போளூர் -                                    ராணி சண்முகம்

பெரணமல்லூர் -                       வேணி ஏழுமலை

தேசூர் -                                            ராஜா ஜெகவீரபாண்டியன்

கண்ணமங்கலம் -                        மகாலட்சுமி

வேட்டவலம் -                               கௌரி நடராஜன்

கீழ்பெண்ணாத்தூர் -                    சரவணன்

புதுப்பாளையம் -                          செல்வபாரதி மனோஜ் குமார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு தலைவர் வேட்பாளர்கள்  

திருவண்ணாமலை -                                 நிர்மலா கார்த்திக் வேல்மாறன்

ஆரணி -                                                         ஏ.சி . மணி

திருவத்திபுரம்  -                                          விஸ்வநாதன்

வந்தவாசி -                                                    ஜலால்

நாளை நடைபெற உள்ள நகர மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு இவர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.          

Tags:    

Similar News