பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

Update: 2021-10-16 08:53 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேத விபரங்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை வேளாண்மை இணை இயக்குநர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிவிக்க வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

வடகிழக்கு பருவமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்படும் பயிர் சேதங்களை குறித்து வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையால் ஆய்வு செய்து சேத விபரங்கள் கணக்கிடப்படும். மழையால் பயிர் சேதம் அடைந்துள்ள விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்,  துணை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயிர் சேதம் குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்.

அதேபோல் வட்டார அளவில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News