பயிர் சேத விவரங்களை தெரிவிக்க விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பயிர் சேதவிவரங்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2021-11-11 11:47 GMT

மாதிரி படம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான பயிர் சேத விவரங்களை விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார் இதற்கான பணியில் வருவாய் வேளாண்மைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏரி, குளங்கள், பாசனக் கிணறுகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிடும் பணியில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பயிர் சேத விவரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தெரிவிக்கும் பயிர் சேத விபரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அதிகாரிகள் குழுவால் நேரடி களஆய்வு செய்யப்பட்டு, அதன்மூலம் விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தை வெளியேற்றவும், பாதிப்புக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News