படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்து கொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலையில் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் படைவீரர் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

Update: 2021-12-06 01:44 GMT

கொடிநாள் விழா (மாதிரி படம் )

திருவண்ணாமலை  ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு முன்னாள் படைவீரர் கொடி நாள் விழாவையொட்டி உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News