திருவாண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவ விழா

-பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Update: 2021-04-18 05:40 GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் வசந்த உற்சவம் சிறப்பு பெற்றதாகும். இந்த வசந்த உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயம் முன்பாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பம்சமாக அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தலவிருட்சமான மகிழ மரத்தை சுற்றி வரும்போது மங்கள இசையுடன் வேத மந்திரங்கள் ஒலிக்க சிவனும் சக்தியும் வலம் வருவார்கள் வேதத்துக்கே நாயகனான ஈசன் தேவாரத்தின் பெருமையை எடுத்துச் சொல்லவதே இந்த விழாவின் பொருள் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் வலம் வரும்போது அலங்கரிக்கப்பட்ட குழந்தை பொம்மை மலர்களை தூவி வணங்குவதாக ஐதீகம்.

முன்னதாக இன்று சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு மகிழ மரம் அருகிலுள்ள மண்டபத்தில் குழந்தை பொம்மை மலர்களை தூவி வணங்கக்கூடிய அந்த காட்சிகளை பக்தர்கள் பார்த்து மகிழ்ந்து, அண்ணாமலையாரை வணங்கினர்.

Tags:    

Similar News