நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை

திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறைமேற்கொண்ட ர் திடீர் சோதனையில் சுமார் ரூ.3 லட்சம் பறிமுதல்

Update: 2021-10-01 06:08 GMT

திருவண்ணாமலை  நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி இயக்குனரான மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் நகரில் 4 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்திற்கு கட்டிட அங்கீகாரம் வழங்க லஞ்சம் கேட்பதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

அதை தொடர்ந்து  லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அந்த அலுவலகத்தின் எதிரில் உள்ள இடைத்தரகர்கள் அலுவலகங்களிலும் சோதனை செய்யப்பட்டது.  

சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.3 லட்சம் அந்த அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று  மதியம் சுமார் 1 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை  நள்ளிரவு   வரை  நடைபெற்றது. 

ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தகுதியில்லாத மனைகளுக்கு பல மாதங்களாக லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதி இல்லாத மனைகளுக்கு அனுமதி அளித்தது தெரியவந்துள்ளது.

அலுவலகம் இயங்கும் நேரத்தில் கணக்கில் வராத பணம் கட்டுக் கட்டாக பிடிபட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News