7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 73 வயது முதியவர் போக்சோவில் கைது

7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 73 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-01 05:24 GMT

திருவண்ணாமலை மாவட்டம் பழையனுாரைச் சேர்ந்தவர் குள்ளன்,( வயது  73.).இவர், நேற்று முன்தினம் மாலை, 7 வயது சிறுமியிடம், 'டிவியில் கார்ட்டூன் படம் ஓடுகிறது; பார்க்க வா' என, நைசாக பேசி, வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டு ஓடி, தன் தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், தச்சம்பட்டு போலீசில் புகார் செய்தார்.முதியவர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து அவரை இன்று கைது செய்தனர்.

Tags:    

Similar News