திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 31 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 31 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்பட்டது.

Update: 2022-03-05 08:45 GMT

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு அமைச்சர் எ.வ.வேலு தங்கமோதிரம் அணிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 31 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை, ரொட்டி, பழங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் வழங்கினர். மேலும் குழந்தைகளின் தாய்மாருக்கும் புத்தாடைகள், சத்துள்ள உணவு வகைகள், பழங்கள் ஆகியவற்றை வழங்கினர்.

இதில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் திருமால் பாபு, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, அண்ணாதுரை எம்பி, திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் மருத்துவர் எ.வ.வே. கம்பன், நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் கணேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், நகர மன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News