திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையை தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா மற்றும் சிதம்பரா ஆகியோர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா மற்றும் சிதம்பரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் நோயாளிகள் அவசர மேல் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வந்து பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் இந்த மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என வந்த புகார்களை அடுத்து இந்த மருத்துவமனையில் மருத்துவமனையைதேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத்தின் தலைவர் ரமேஷ்கண்ணா மற்றும் சிதம்பரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது, மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல்,மருத்துவமனையை கண்காணிக்கும் முறைகளை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் மருத்துவர்கள் பிரபுசங்கர்,சரவணன், மற்றும் முதன்மை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.