கோவில் விழாவிற்கு பாஜக மாவட்ட தலைவர் அழைத்ததற்கு எதிர்ப்பு!

திருவள்ளூர் அடுத்த பட்டறை கிராமத்தில் நடைபெறும் கோவில் விழாவிற்கு பாஜக மாவட்ட தலைவர் அழைத்ததற்கு எதிர்ப்பு. நான்கு பேரும் மீது வழக்கு.

Update: 2024-05-30 11:15 GMT

திருவள்ளுர் அருகே கோவில் விழாவிற்கு பாஜக மாவட்ட தலைவரை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர்

பாஜகவின் திருவள்ளுர் மேற்கு மாவட்ட தொழிலாளர் பிரிவு அமைப்பசாரா நிர்வாகியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், மணவாள நகர் அடுத்த பட்டறை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் திருக்கோவிலின் 34- ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பாஜகவின் திருவள்ளுர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் என்பவரை சிறப்பு அமைப்பாளராக செந்தில் அழைத்ததாகவும், மணவாளநகர் அடுத்த கம்மவார்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜகவின் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் என்பவரை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம் ஏற்கனவே மாவட்ட தலைவராக இருந்த ராஜ்குமார் ஆதரவாளராக இருப்பதால், ராஜ்குமாருக்கும் தற்போது மாவட்ட தலைவர் அஸ்வின் இடையே உட்கட்சி மோதல் நிலவி வருவதால், பன்னீர்செல்வம் அடியாட்களுடன் செந்தில் வீட்டிற்கு சென்று செந்திலை அடித்து கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செந்தில் மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி பன்னீர்செல்வம், கார்த்திக், பாலா, ராஜா ஆகியார் மீது 294B ,324 பிரிவு கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறை ஆனவர்களை தேடி வருகின்றனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News