மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே மப்பேடு கிராமத்தில் மொட்டை மாடியில் மீன் கம்பி இருப்பது அறியாமல் செல்போன் பேசிக்கொண்டே சென்று வடமாநில கூலி தொழிலாளி கழுத்தில் மின் கம்பி பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மொட்டை மாடியில் சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அருகில் இருந்த மின் ஒயரை கவனிக்காமல் சென்றதால் கழுத்தில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் சானோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அச்சம்ரோங்மெய் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மப்பேடு மேட்டுச்சேரி கிராமத்தில் சரவணன் என்பவர் வீட்டில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களுடன் தங்குவதற்காக சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார்.
அப்பொழுது மாடியின் அருகே சென்ற மின் ஒயரை கவனிக்காமல் அருகே சென்றதால் கழுத்தில் மின் உயர் பட்டுள்ளது இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.