1600 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய அமைச்சர் காந்தி
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1600 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் காந்தி வழங்கினார்
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் 1600 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் :
திருவள்ளுர் அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கத்தில் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் 1600 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவில் 100 இடங்களில் சிறப்பு பட்டா வழங்கும் முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் ஏழை எளிய மக்கள் திருவள்ளுர் தொகுதியிங பயனாளிகள் தேர்வு செய்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து திருவள்ளுர் மருத்துவ கல்லூரி அரங்கத்தில் 1600 பயனாளிகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதில் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி) ,எஸ்.சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் (பூவிருந்தவல்லி), மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் வருவாய் கோட்டாச்சியர் (பொ) ஐவண்ணன், பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார், மற்றும் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.