கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் ஓடும் தண்ணீர்: போக்குவரத்து பாதிப்பு..!

புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் காரணமாக கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2023-12-06 04:15 GMT

கன்னிகைபேர் ஏரி முழு கொள்ளளவை எட்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன்னிகைப்பேர் ஏரியிலிருந்து வெளியேறும் நீரால் ஜனப்பச்சத்திரம்- பெரியபாளையம் வழியாக திருப்பதி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் இடுப்பளவு செல்லும் தண்ணீரில் சிறுவர்கள் குளித்து விளையாடி வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக அதிகன மழையானது பெய்து வந்தது இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரி குளங்கள் ஆறு நிரம்பி வழிந்து வருகிறது. பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் ஏரி நிரம்பி களங்கள் வழியாக தண்ணீர் ஆனது வெளியேறி வருகிறது.

இந்த தண்ணீரானது ஜனபசத்திரம் பகுதியில் இருந்து பெரியபாளையம் வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து இடுப்பளவு செல்வதால் அவ்வழிய வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஒரு சில கனரக வாகனங்கள் ஆபத்தான நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீர் நிலைகளை தாண்டி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆனது இடுப்பளவு தேங்கி பாய்ந்து வருவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் இடுப்பளவு  தண்ணீரில் ஆபத்தை உணராமல் குதித்து விளையாடி சோப்பு போட்டு குளித்தும் வறுகின்றனர்.

இதுபோன்று செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மேலும் தண்ணீர் வடியும்  வரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னை திருப்பதி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News