கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!
திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி வழங்கினார்.
திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை பூந்தமல்லி எம்எல்ஏ வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூர் விளையாட்டு திடலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டத்தின் கீழ் 526 ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி தொகுதி திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சிக்கு ரூ.27 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்கத்துல்லாகான், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், புலியூர் ராஜி, தரணி, புன்னப்பாக்கம் குமார் வெள்ளியூர் வேலு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான கிரிக்கெட் மட்டை, பந்து, கை உறை, ஸ்டெம்ப், போன்ற உபகரணங்களும், கால் பந்து, கைப்பந்து கேரம் போர்டு, சிலம்பம் கம்பு, பிளாஸ்டிக் விசில், ஸ்கிப்பிங் கயிறு உடற்பயிற்சி செய்வதற்கான தூக்கு குண்டு உள்பட 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் புட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் லோகம்மாள் கண்ணதாசன் செவ்வாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பு திருவூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் புன்ன பாக்கம் , காக்களூர் வெள்ளியூர், புலியூர், வேப்பம்பட்டு 25, அரண்வாயில், ஈக்காடு, தொழுவூர்ஊராட்சி மன்ற தலைவர்கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களைப் பெற்று சென்றனர்.