தலைமை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..!

திருவள்ளூரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-18 02:45 GMT

தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வை உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் ஜம்பு தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் முரளிதர் வரவேற்றார், நிர்வாகிகள் செந்தில் வளவன், கோவிந்தராஜன், ஜெகதீஸ்வரன், ரேவதி, ராமமூர்த்தி, லிங்கேஸ்வரன், ஜெயவேலு, பாரிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் தாஸ், பிரபாகரன்,சாமி,லலிதா, சரவணன், கணேசன், குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்4 5.ஆண்டுகளாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையானது பதவி உயர்வு வழங்காமல் இந்நாள் வரையும் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் . உதவி பெறும் அரசு பள்ளிகளில் பயிலும் ஆங்கில பிரிவு மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் வழங்க வேண்டும்.

மற்றும் 720.ன் படி வழங்கப்பட்ட தனி ஊதியத்தை மீண்டுமாக வழங்க வேண்டும் என்றும். மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயணம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணி மேம்பட. உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உருவாக்க வேண்டும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

என்பன  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான ரோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜெயலிங்கம், பரமேஸ்வரி, கிளாடிஸ் நவஜோதி, பாலமுருகன், முருகன்,அகத்தியன், செல்வி,சுந்தர், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News