தீயணைப்பு வீரர்களின் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி..!

மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையாக எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-09-30 05:45 GMT

திருவள்ளூரில் நடந்தபேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி 

திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதையொட்டி  தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுப்பிரமணியம் ஏற்பாட்டில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மழை வெள்ளம் வரும்போது வெள்ளத்தில் சிக்கியவர்களை  அதிலிருந்து எவ்வாறு பாதுகாக்கவேண்டும்? வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அவர்களை எப்படி மீட்கவேண்டும்? போன்ற செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. 

 வெள்ள பாதிப்பு பகுதிகளில் கிடைக்கும் பழைய பொருட்களைக் கொண்டு எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும், தீவிபத்தின் போது தற்காத்து கொள்வதும், சாலையோரம் மரங்கள் மற்றும் கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற பயிற்சிகள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க ஒத்திகை நடத்திக் காட்டினார்.

இந்த  நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்புத்துறை உதவி அலுவலர் வில்சன், பேரிடர் மீட்புப் குழு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பது இங்கு எல்ல்லோரும் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். பேரிடர் மீட்பு குழு அல்லது தீயணைப்புக்குழுவினர் வந்து சேர்வதற்கு தாமதம் ஆகலாம். அதைப்போன்ற சூழ்நிலையில் பொதுமக்களே தீவிர செயலில் இறங்கி பாதுகாப்பது அவசியம் ஆகும். அதற்கு இதைப்போன்ற பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

குறிப்பாக இதைப்போன்ற பயிற்சிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அளிப்பது அவசியமான ஒன்றாகும். 

Tags:    

Similar News