திருமுல்லைவாயல் கோயில் சொத்தை அபகரிக்க முயற்சி, பொதுமக்கள் போராட்டம்
திருமுல்லைவாயல் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் அமைந்துள்ள பக்தவத்சல பெருமாள் கோயில்.
இந்த கோயிலுக்குச் சொந்தமான சுமார் 13கிரவுண்ட் இடத்தை திமுக வட்டச் செயலாளர் உதயக்குமார் என்பவர் திமுக கொடி கம்பத்தை இரவோடு இரவாக நட்டு லாரிகளில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
இதனை எதிர்பாராத கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் காலனி வாழ் பொதுமக்கள் ஒன்றிணைந்து கோவில் இடத்தை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்த இடத்தை திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.