வஞ்சிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-01-19 07:49 GMT

வஞ்சிபாளையம் பகுதியில் நாளை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. (கோப்பு படம்)

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நாளை மின்தடை செய்யப்படுகிறது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு, அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்

வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில், நாளை  (20ம் தேதி - வெள்ளிக்கிழமை)  காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் இருந்தும், எரியாத மின்விளக்குகள்

பல்லடம் நகரம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பொள்ளாச்சி, உடுமலை, கோவை உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக பல்லடம் நகரம் உள்ளது.இந்த நிலையில் பல்லடம் நகரில், விபத்துக்களை தவிர்க்கவும், நகரத்திற்கு அழகு சேர்க்கும் விதமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில்,  50 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதனால் பல்லடம் நகரமே ஜொலித்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, சாலை தடுப்பில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் நால்ரோடு சந்திப்பில் உள்ள, உயர் மின் கோபுர விளக்குகளும் எரிவதில்லை. இதனால், அந்த இடமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துகள் நேரும் அபாயமும் உள்ளது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News