முதியவர்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்..!

மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் மகளால் உணவின்றி தவித்த முதியோர் தம்பதிக்கு உதவிக்கரம் நீட்டிய R-SOYA தன்னார்வலர்கள்.!

Update: 2021-04-28 02:59 GMT

நெல்லையை அடுத்த மானூர் ஒன்றியம் எட்டாங்குளம் கிராமத்தில் கீழத்தெருவில் வசித்துவந்த பெருமாள் (86) அவர் மனைவி வள்ளியம்மாள் (82) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருடன் இருந்த மகளுக்கு கொரோனா வந்ததால் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதனால் முதியோருக்கு உணவு சமைத்து கொடுக்க ஆள் இல்லாமல் இரு தினங்களாக கஷ்டப்படுவதை அறிந்த மானூர் தாலுகா தாசில்தார் ராஜேந்திரன் முதியவரின் மகள் சிகிச்சை பெற்று வரும் வரை உணவு கிடைக்க வழி செய்ய நினைத்தவர் R-SOYA விடம் உதவி கேட்டதன் பேரில், எட்டாங்குளம் கிராமத்திற்கு சென்ற R-SOYA தன்னார்வலர்கள் மாரிமுத்து மற்றும் கோல்டன் கணேசன் மூன்று வேளை உணவு சமைத்து கொடுக்க, அதே ஊரில் நல்ல உள்ளம் கொண்டு முனியம்மாள் என்பவரை அணுகி சமைத்து கொடுங்கள் அதற்காக ஆகும் தொகையை தருகிறோம் என உதவி கேட்டதும், இரு முதியவருக்கும் மூன்று வேளை உணவு சமைத்து கொடுக்க சம்மதித்தார். முதியவர் உணவு கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News