நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-01-29 10:00 GMT

பைல் படம்.

மாநகராட்சி, நகராட்சிகள், டவுன் பஞ்சாயத்துகளுக்கான சாதாரண தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், கட்சி கொடிகள் அகற்றும் பணி கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் ஆலோசனைப்படி வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலும், மேலப்பாளையம் பகுதியில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் அனைத்து படைகல உரிமைகளும் தங்கள் துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் வரும் 3-ம் தேதிக்குள் ஒப்படைத்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின்பு தமது பொறுப்பில் துப்பாக்கிகளை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News